வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து: கமல் வரவேற்பு
சேலம் பெரியார் பல்கலை மாணவி வளர்மதி கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டங்களுக்கு ஆதரவாக, துண்டு பிரசுரங்கள் வினியோகித்ததாகவும், போராட்டத்துக்கு துாண்டியதாகவும், வளர்மதியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவை, சேலம் போலீஸ் கமிஷனர், ஜூலை 17ல் பிறப்பித்தார். இதனை எதிர்த்து அவரது தந்தை மாதையன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு நடிகர் கமலஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது: "வளர்மதி வளர், பௌர்ணமியை நோக்கி. மயங்கா நீதி தேவர்க்கும் வணக்கம்". இவ்வாறு கூறியுள்ளார்.