Skip to main content

தமாகாவில் இருந்து வந்தவருக்கு இரண்டுபதவியா? -அதிருப்தியில் ர.ரக்கள்

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

 

தமாகாவில் இருந்து வந்தவருக்கு இரண்டு பதவிகளை வழங்குவது என்ன நியாயம் என முன்னாள் அமைச்சரும் எம்,பியுமான வைத்தியலிங்கத்தையும், சிட்டிங் அமைச்சர் துறைக்கண்ணுவையும் கண்டித்து 30 க்கும் மேற்பட்டோர் அதிமுகவினர்  அக்கட்சியில் இருந்து விலகியிருப்பது கும்பகோணம் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

 

mp

 

தஞ்சை மாவட்டம் பாபநாசம், சுவாமிமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து முன்னாள் தமாக எம்,எல்,ஏ ராம்குமார், அவரது ஆதரவாளரான சுவாமிமலை சங்கர் உள்ளிட்ட சிலர் தமாகாவில் இருந்து விலகி அதிமுகவில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் முன்னிலையில் ஐக்கியமானார். அவர்கள் சேர்ந்து ஓராண்டுக்குள்,  கூட்டுறவு உள்ளிட்ட பதவிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன.  நீண்ட காலமாக கட்சியில் இருக்கும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அமைச்சர் துறைக்கண்ணுவிடம் பலமுறை கூறியும் எந்தபதிலும் இல்லை என்பதால் கட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளனர்.

 

இதுகுறித்து சுவாமிமலை திருமஞ்சன வீதியை சேர்ந்த அதிமுக அம்மா பேரவை நகர செயலாளர் ரவிச்சந்திரன், சுவாமிமலை அதிமுக பேரூர் செயலாளர் ரங்கராஜனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, " தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையைச் சேர்ந்தவர் சங்கர். இவர் கடந்த ஆண்டு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து மத்திய கூட்டுறவு சங்க இயக்குனர் பதவி, சந்திரசேகரபுரம் கூட்டுறவு பண்டகசாலையில் இயக்குனர் பதவி என இரண்டு பதவிகள் வழங்கப்பட்டது.

 

இதற்கு சுவாமிமலை பகுதி அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கட்சியில் புதிதாக சேர்ந்தவருக்கு ஒரு ஆண்டில் ஒருவருக்கு இரண்டு பதவி வழங்கப்பட்டிருக்கு. ஆனால் காலம் காலமாக கட்சியில் இருக்கும் நிர்வாகிகளுக்கு ஒரு பதவி கூட வழங்கவில்லை. அதோடு பரஸ்பர சகாய நிதியிலும் இரண்டு கிளர்க் போஸ்டிங்கும் அவரது உறவினருக்கு கொடுத்துள்ளனர். இது எங்களை ஏமாற்றுவதாகவே இருக்கிறது. இதுகுறித்து மாவட்ட செயலாளர் துறைக்கண்ணுவிடமும்,  மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கத்திடமும்  பலமுறை கூறியும் எந்த  பதிலும் இல்லை.  கட்சியில் உள்ள தொண்டனுக்கு எந்த பதவியும் வழங்கவில்லை. ஆகவே அதிமுகவில் இருந்து விலகுகிறோம். என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

 

சுவாமி மலைப்பகுதியில் அதிமுகவில் இருந்து 30 பேர் விலகியதற்கு பின்னணியில் அமைச்சர் துறைக்கண்ணுவின் கைவரிசை இருப்பதாக அதிமுகவினர் கிசுகிசுக்கின்றனர். இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது," முன்னாள் எம்எல்ஏ ராம்குமார் வைத்தியலிங்கத்தின் ஆதரவாளராக இருக்கிறார். அதுபோல ராம்குமாரின் ஆதரவாளரான சங்கரும் வைத்தி ஆதரவாக இருக்கிறார். அதனால் தனக்கு எதிராக ஒரு அரசியல் லாபியை இவர்கள் நடத்தி வருகிறார்கள் என துரைக்கண்ணு பலமுறை தனது ஆதரவாளர்கள் சிலரிடம் ஆதங்கப்பட்டிருக்கிறார்.

 

 இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் சிபாரிசின்படி கும்பகோணம் நகர செயலாளர் ராமநாதன் இந்தப் பொறுப்புகளை வழங்கியிருக்கிறார். இது அமைச்சர் துறைக்கண்ணுக்குத் தெரிந்து கடும் கோபத்துக்கு உள்ளாகி அவரது ஆதரவாளர்களான சிலரை கிளப்பிவிட்டு கட்சியிலிருந்து நீங்குவதாக புகார் அனுப்ப சொல்லியிருப்பதாக கூறுகிறார்கள். அதன்படியே 30 பேர் நீங்குவதாக அறிவித்துள்ளனர்." என்கிறார்கள்.

சார்ந்த செய்திகள்