தமிழகம் முழுவதும் 9 அரசு மருத்துவக்கல்லூரிகள் நிறுவவுள்
இந்நிலையில் கிருஷ்ணகிரி தலைமை மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்ந்தப்பட்ட நிலையில், அந்த தலைமை மருத்துவமனையை வேறு வட்டத்தில் உள்ள அரசு மருத்துமனைக்கு, தலைமை மருத்துவமனையாக மாற்றும் பணி நடை பெற்று வருகிறது.
இதில் ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை, போச்சாம்பள்ளி, பர்கூர் என நான்கு வட்டத்திலுள்ள ஒரு அரசு மருத்துவமனையை தேர்வு செய்ய உள்ளனர்.
இதில் பர்கூர் ஆரம்ப சுகாதர நிலையமாக இருந்ததை இரண்டு வருடங்களுக்கு முன்பாகத்தான் தரம் உயரத்தபட்டு அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இங்கு ஒரு நாளைக்கு நோயளிகள் வருகையின் எண்ணிக்கை அதிகபட்சமாக 100 ஆக உள்ளது. அதேபோல பர்கூரில் இருந்து கிருஷ்ணகிரி 20 கிலோமீட்டர் தொலைவே உள்ளாதால் அந்த பகுதி மக்களுக்கு தலைமை மருத்துவமனை வரவில்லை என்றாலும் கூட எந்தவிதமான பாதிப்பும் இருக்கப் போவதில்லை.
அதேபோல போச்சம்பள்ளியும், தேன்கனிக்கோட்டையும் கிருஷ்ணகிரியை ஒட்டியப்படியே உள்ள நிலையில் எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால் ஊத்தங்கரையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு போகவேண்டும் என்றால் இரண்டரை மணிநேரம் ஆகும். அதேபோல ஊத்தங்கைரை தர்மபுரி , திருவண்ணாமலை ஆகிய மாவட்டத்தின் எல்லை என்பதால் இங்குள்ள அரசு மருத்துவமனையில் ஒரு நாளைக்கு மட்டும் குறைந்தபட்சம் 800 முதல் 1000 வரை நோயாளிகள் வருகிறன்றனர்.
அதேபோல மருத்துவனையில் தங்கி சிகிச்சை பெரும் நபர்கள் 790 பேர் உள்ளனர். அதேபோல சேலம், கோவை, சென்னை, திருவண்ணாமலை என முக்கிய இணைப்பு இடமாக இருக்கும் சூழ்நிலையில் அதிகமான விபத்து ஏற்பட்டு சிகிச்சைக்காக கொண்டுவரப்படும் நபர்களை போதிய வசதிகள் இல்லாமல் தர்மபுரி அல்லது கிருஷ்ணகிரிக்குதான் கொண்டு செல்லவேண்டி உள்ளது. இந்தநிலையில் போகும் வழியிலே சிலர் இறந்து விடுகிறார்கள்.
தலைமை மருத்துமனையை ஊத்தங்கரைக்கு கொண்டுவந்தால் அதிகமான பாதிப்பு, இறப்புக்களை தடுக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். இதனை மாவட்ட ஆட்சியர்தான் தலைமைக்கு தேர்வு செய்து அனுப்பவேண்டிய நிலையில் அதற்கான பணியை தொடங்கியுள்ளார் மாவட்ட ஆட்சியர். ஆனால் இதற்கு இடையில் அதிமுக முக்கிய பிரமுகர் ஒருவர் மாவட்ட ஆட்சியருக்கு ஊத்தங்கரைக்கு கொடுக்க கூடாது அதனை பர்கூர் அல்லது போச்சம்பள்ளிக்கு கொடுக்கவேண்டும் என அழுத்தம் கொடுத்துவருகிறாராம்.