Skip to main content

 யு. பி. சிங் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தியதை காலம் கடந்த செயலானாலும் வரவேற்கிறோம் :  பி.ஆர்.பாண்டியன் 

Published on 09/05/2018 | Edited on 09/05/2018
pr pandiyan

 

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசியபோது, 

’’காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கர்நாடக தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு காலம் கடத்துவதற்கு துணை போவதை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி படுத்தியுள்ளது. இதனால் உச்ச நீதிமன்றத்தின் மீது மக்கள்
நம்பிக்கையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது வேதனையளிக்கிறது.

 

மத்திய அரசு வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் கடந்த மார்ச் 9ல் நடைபெற்ற கூட்டத்தில் மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தாதது ஏன்? எனநீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளது கண்டிக்கதக்கது. காரணம் நீர் வளத்துறை ஆணையக செயலர் தீர்ப்பு குறித்து கருத்து கேட்டதே நீதிமன்ற அவமதிப்பாகும். 

 

 

 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தீர்ப்பிற்கு அனைவருமே கட்டுபட்டவர்கள் தான் என்பதை உணர வேண்டும்.

 

 காவிரி நடுவர் மன்ற  இறுதி தீர்ப்பின்படி 14.75 டிஎம்சி தண்ணீர் குறைப்பு தவிர மற்ற அனைத்தும் அதனை பின்பற்றி நிறைவேற்றப்பட வேண்டும்.
இதனடிப்படையில் செயல் திட்டம் உருவாக்குவதில் சந்தேமிருந்தால் நீதிமன்றத்தில் மட்டுமே தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

 

கே.கே. வேணுகோபால் மத்திய அரசு வழக்கறிஞராக பதவியேற்கும் முன் காவிரி வழக்கில் தமிழக அரசின் வழக்கறிஞராக
செயல்பட்டவர்.

 

தமிழக அரசின் வழக்கு குறித்த சாதக பாதகங்களை முழுமையாக அறிந்தவர். எனவே அவரது தற்போதையசெயல்பாடுகள் தமிழகத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு சாதகமாக செயல்படுவதால் தமிழக நலனுக்கு பாதகமாக அமைந்து விடுமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

மத்திய நீர்வளத்துறை செயலர் யு பி.சிங் நீதிமன்ற  விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். காலம் கடந்த நிலையில் வரும் 14ந் தேதி  நீதிமன்றத்தில் ஆஜராக உத்திர விட்டுள்ளதை வரவேற்கிறோம். அன்றைய தினம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற நம்பிக்கையில் நீதிமன்ற நடவடிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். மறுக்கும் பட்சத்தில் தீவிர போராட்டத்தில் களமிறங்குவோம்  ’’என்றார்.

 

சார்ந்த செய்திகள்