தமிழ்நாடு அரசு இன்று (13/01/2022) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் இன்று (13/01/2022) வாரிய மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்த ராவ் இ.ஆ.ப., வாரிய கண்ணகி நகர் திட்டப்பகுதியில் 10862 சதுர அடியில் உள்ள கட்டிடத்தினை பல இலவச சேவைகள் மேற்கொண்டு வரும் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கத்திற்கு குறைந்த வாடகையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆணையை டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் மாரிசாமியிடம் வழங்கினார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கண்ணகி நகர் திட்டப்பகுதியில் வசித்து வரும் குடியிருப்புதாரர்களின் குழந்தைகளுக்கு கல்வியுடன் சேர்த்து விளையாட்டு பயிற்சிகள், தற்காப்பு பயிற்சிகள், பண்பாட்டு பயிற்சிகள், யோகா, நிலவொளி கல்வி (எண்ணும் எழுத்தும் கற்பித்தல்), மரம் நடுதல், டி.என்.பி.எஸ். குரூப் 4 தேர்வு பயிற்சி, முதல் தலைமுறைப் பட்டதாரிகளின் படிப்பிற்கு அனைத்து உதவிகளும் வழங்குதல், பொது நூலகம் அமைத்தல் கல்வி சுகாதாரம், சுற்றுச்சூழல், மருத்துவம், சமூகம், சட்டம் நிர்வாகம், பாலின சமத்துவம், மனித உரிமைகள், மகளிர் உரிமைகள், அரசு நலத்திட்டங்கள் தொடர்பான முறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருதல் பேரிடர் காலங்களில் (வெள்ளம், கரோனா ஊரடங்கு காலத்தில்) குடியிருப்புகளில் உள்ள அனைவருக்கும் அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி வருவதால், குடியிருப்புகளில் உள்ள மாணவ, மாணவியர்கள், மகளிர் மற்றும் அங்கு வசிக்கும் மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் வாரிய உதவிச் செயலாளர் (குடியிருப்பு) ஆ.கற்பகம் உடன் இருந்தனர்.