கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவிடம் தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து தனிப்படை போலீசார் இரண்டாவது நாளாக விசாரணை நடத்திவருகின்றனர்.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா 'நாளையும் விசாரணை நடைபெற இருப்பதால் நடைபெற்ற விசாரணை குறித்து நாளை பேசுகிறேன். என்னென்ன கேள்விகள், எத்தனை கேள்விகள் கேட்டார்கள் என சொல்ல முடியாது. ஆனால் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தேன்' என்று கூறியிருந்தார். இந்நிலையில் சசிகலா சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். முக்கியத்துவம் வாய்ந்த எங்களின் இடத்தில் விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தில் தொடர்புடையவர்கள் ஒவ்வொருவராக சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்துள்ளனர். காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். காவலாளி ஓம் பகதூர் உள்ளிட்டோர் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.