Skip to main content

விரிவுரையாளர்கள் செய்த வேலைக்கு சம்பளம் இல்லை என்று சொல்லும் பல்கலைகழக நிர்வாகம்!

Published on 01/08/2019 | Edited on 01/08/2019

தமிழகத்தில் செயல்பட்டு வந்த 14 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை அரசு ஏற்று நடத்தும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதனைத்தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஒரத்தநாடு, அறந்தாங்கி, லால்குடி மற்றும் பெரம்பலூர் உறுப்புக் கல்லூரிகள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 14 உறுப்புக் கல்லூரிகளில் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டன.

 

University administration says no salary to lecturers

 

எனினும் இந்த கல்லூரிகளில் செலவினங்களை பல்கலைக்கழகங்களை ஏற்றுக்கொண்டு பின்னர் அரசிடம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்தநிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பல்கலைக்கழக ஆளுகைக்குட்பட்ட 4 கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் மணிநேர விரிவுரையாளராக பணியாற்றுபவர்களுக்கு காலநீடிப்பு மற்றும் ஊதியம் தொடர்பாக வழங்குவது தொடர்பான விவரங்கள் குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள்.

அதில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுவதுடன் சம்பளம் வழங்குவதற்கு ஏதுவாக அவர்களின் வருகைப்பதிவேடு விவரங்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் ஆனால் மணிநேர விரிவுரையாளர்கள் ஜூன் 17 தொடங்கி ஜூன் 30 வரையிலான 17 நாட்களுக்கு மட்டும் பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாகவும் அந்த காலகட்டத்திற்கான சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஜூலை மாதம் முழுவதும் அவர்கள் பணியாற்றிய முடிந்தும் இப்போது ஆகஸ்ட் மாதம் தொடங்கும் நிலையில் மணி நேர விரிவுரையாளர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்க பல்கலைக்கழகம் முன்வராததால் மணி நேர விரிவுரையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல 4 அரசுக் கல்லூரிகளிலும் பணியாற்றும் 31 நிரந்தர பேராசிரியர்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஊதிய பரிந்துரைப்படி சம்பளம் வழங்கப்பட எடுக்காதது பேராசிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே பணியாற்றி வரும் தற்காலிக பேராசியர்களுக்கு அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு இந்த வரும் மீண்டும் புதிக விண்ணப்பித்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்கிற அறிவிப்பு ஏற்கனவே அதிர்ச்சியில் அளித்த நிலையில் தற்போது பணியாற்றிதற்காக கூலியை இப்படி தராமால் இப்படி விரிவுரையாளர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று புலம்புகிறார்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்