Skip to main content

சீனாவில் மருத்துவம் படித்த உதித்சூர்யா?-நீட் ஆள்மாறாட்ட சர்ச்சையில் புதுத்தகவல்!

Published on 21/09/2019 | Edited on 21/09/2019

 

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்ததாக உதித் சூர்யா என்ற மாணவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சம்பந்தப்பட்ட மாணவர் சீனாவில் ஏற்கனவே மருத்துவப்படிப்பை  தொடங்கி படிப்பை பாதியில் விட்டவர்  என்கின்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Udith Surya, who studied medicine in China, renews controversy in Neet impersonation controversy!


கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நீட் தேர்வு மூலம் சென்னையை சேர்ந்த டாக்டர் வெங்கடேசன் என்பவரின்  மகன் உதித்சூர்யா மும்பையில் நீட்தேர்வு எழுதியதின் மூலம் தேர்ச்சி பெற்றார் என்ற அடிப்படையில் தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து முதலாமாண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தார். 

ஆனால் மும்பையில் நீட்தேர்வு எழுதியது உதித்சூர்யா இல்லை என்றும், அதற்கு பதிலாக ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதி இருக்கிறார் என்று கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் ஆள்மாறாட்டம் மூலம் உதித்சூரியா கல்லூரியில் சேர்ந்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில் இது தொடர்பாக மாணவனின் தந்தையிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முயன்று வரும் நிலையில் சமபந்தப்பட்ட மாணவன், அவரது தந்தை உட்பட அந்த குடும்பமே தலைமறைவாகியுள்ளது. தற்போது இந்த சர்ச்சை பேருருவம் எடுத்துள்ளது.  

இந்நிலையில் ஏற்கனவே உதித் சூர்யா சீனாவில் மருத்துவப் படிப்பை ஆரம்பித்ததாகவும், ஆனால் பல்வேறு காரணங்களால் உதித் சூர்யா மருத்துவப் படிப்பை தொடராமல் கைவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தேனி கல்லூரியில் சேருவதற்கு முன் சீனாவில் இரண்டு மாதம் மருத்துவ படிப்பு தொடங்கி பாதியில் கைவிட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்