Skip to main content

பலரின் கண் திருஷ்டியால் முக்கொம்பு அணை உடைந்தது - ஆர்.பி.உதயகுமார்

Published on 02/09/2018 | Edited on 02/09/2018


பலரின் கண் திருஷ்டியால் முக்கொம்பு அணை உடைந்துள்ளது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,

மேட்டூர் அணை நிரம்பவே நிரம்பாது. ஆனால், இந்த ஆண்டு மட்டும் நான்கு முறை நிரம்பியுள்ளது. முதலமைச்சர் பழனிசாமிக்கு தண்ணீர் ராசி இருப்பதால் தான் அனைத்து அணைகளும் நிரம்பி வழிகிறது. கர்நாடக அணைகளில் இருந்து எவ்வளவு தண்ணீர் வெளியேற்றினாலும் நாங்கள் ஏற்போம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியதன் கண் திருஷ்டி தான் முக்கொம்பு அணை உடைந்துள்ளது. ஆளுங்கட்சியை முடக்கி மக்களுக்கு நலத்திட்ட உதவி கிடைப்பதை தடுக்க எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. அதிமுகவின் சாதனைகளை மறைக்க சிலர் கட்சி தொடங்கி பொய் பரப்புரை செய்கிறார்கள் என்று கூறினார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; “அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது சரியாக இருக்காது” - ஆர்.பி.உதயகுமார்

Published on 06/11/2022 | Edited on 06/11/2022

 

Tuticorin firing; "It will not be right to take action against government officials" RP Udayakumar.

 

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிமுக நிர்வாகிகளுடன் சௌராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூய்மைப் பணி திட்டத்தை துவக்கி வைத்தார்.

 

இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் வன்முறை தலை தூக்கிய பிறகு தான் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது என விளக்கி சொல்லப்பட்டுள்ளது. நடந்த சம்பவத்திற்கு அரசு அதிகாரிகள், காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது சரியான முன்னுதாரணமாக அமையாது. ஏனென்றால் இனி வரும் காலங்களில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தாத அச்சமான நிலையை மக்கள் விவாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்” எனக் கூறினார்.

 

மேலும் அதிமுக சார்பில் பயிற்சி முகாம் ஒன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.பி.உதயகுமார், “கல்லூரி வளாகத்தில் ரவுடிகள் செய்யும் செயல்கள் வீடியோ காட்சிகளாக வந்தது. பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் நெஞ்சம் இதனைக் கண்டு பதை பதைக்கிறது. உடனடியாக தமிழக அரசு இதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். 

 

ஆளுநர் பதவியை பொறுத்தவரை அவரை நியமிப்பது ஜனாதிபதி தான். ஜனாதிபதி தான் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கருத்துக்களை யார் வேண்டுமானாலும் சொல்லலாம்” எனக் கூறினார். 

 

 

Next Story

அமைச்சர் பாதுகாப்பில் கொலை குற்றவாளி உள்ளதாக குற்றச்சாட்டு! கிராம மக்கள் சாலை மறியல்!!!

Published on 11/06/2020 | Edited on 11/06/2020

 

 Madurai incident

 

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் நடைபெற்ற வாலிபர் கொலை வழக்கில் கொலை குற்றவாளியாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட அதிமுக நகர செயலாளர் விஜயனை கைது செய்யக்கோரி, இரு வெவ்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


மதுரை, திருமங்கலம் அருகே புங்கங்குளம் கிராமத்தில் கடந்த 7ஆம் தேதி மணிகண்டன் என்ற வாலிபர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் சக்திவேல் மற்றும் அட்டாக் பிரகாஷ் மற்றும் திருமங்கலம் அதிமுக நகர செயலாளர் விஜயன் உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதிமுக நகர செயலாளர் விஜயன் மட்டும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், அவரை வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தனது பாதுகாப்பில் வைத்துள்ளதாக குற்றம் சாட்டிய மணிகண்டனின் உறவினர்கள், பெற்றோர் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் திருமங்கலம் தேவர் திடல் முன்பு அதிமுக நகர செயலாளர் விஜயனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 

 


மேலும் ஆளுங்கட்சிக்கு உடந்தையாக காவல்துறை செயல்படுவதை கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பினர். வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் (அதிமுக) தனது கட்சியினரை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் கிராம மக்கள் கண்டித்தனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.