




கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திமுக தலைமையிலான அரசு, கரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்திருந்தது.
14ஆம் தேதிவரை 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பைப் பெறுவதற்கான டோக்கனும் வழங்கப்பட்ட நிலையில், இன்றுமுதல் (15.06.2021) அரிசி அட்டைதாரர்கள் 2,000 ரூபாய் மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்புகளை டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில் சென்று ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சேப்பாக்கம் பகுதி, 114வது வட்டம், கானாபாக் தெரு ரேஷன் கடையில் கரோனா பேரிடர் 2ஆம் தவணை நிவாரண நிதியாக ரூ. 2000 & 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டன. அந்தப் பணிகளைப் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு இன்று (15.06.2021) திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வழங்கினார்.