
விழுப்புரம் மாவட்டம் உலகாலப்பாடி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (44). இவர் சுரேஷ் (35) என்பவரோடு ஏற்கனவே வெளிநாட்டில் வேலை செய்துள்ளார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதால் வெளிநாட்டில் பணிபுரிய ஆட்கள் இருந்தால் அனுப்பி வைக்கும்படி சுரேஷ் கூறியுள்ளார். இதனை நம்பி அன்பழகன் அவரின் ஊரை சேர்ந்த 11 பேரிடம் கடந்த 10ஆம் தேதி ரூ. 2,23,220 விசாவிற்காக சுரேஷ் வீட்டில் வைத்து கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ 9,43,000 பணத்தை தன்னுடைய ஊரை சேர்ந்த சதிஷ்குமார், சிவசங்கரி மற்றும் தன்னுடைய வங்கி கணக்கில் செலுத்தும் படி கூறியுள்ளார். இதனை நம்பி பணத்தை செலுத்தியுள்ளார் அன்பழகன்.
ஆனால் இதுநாள் வரை வேலை வாங்கித் தராமலும், பணத்தையும் திருப்பி தராமலும் சுரேஷ் இருந்துள்ளார். இதையடுத்து விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் அன்பழகன் புகார் அளித்துள்ளார். இந்த புகாரையடுத்து உதவி ஆய்வாளர் பாலசிங்கம் தலைமையில் உதவி யஆய்வாளர் சண்முகம், காவலர்கள் மரிய பிரான்ஸிஸஸ், மணிகண்டன், புஷ்பராஜ் ஆகியோர் கும்பகோணம் திருப்பனந்தால் பேருந்து நிறுத்தத்தின் எதிரே நின்றிருந்த சுரேஷை கைது செய்தனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.