Skip to main content

சேலம் சிறையில் பயங்கரவாதிகள் திடீர் உண்ணாவிரதம்

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

Two prisoners went on a sudden hunger in Salem Jail

 

கன்னியாகுமரி எஸ்எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் கைதான பயங்கரவாதிகள் இருவர் சேலம் மத்திய சிறையில் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   

 

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி, பணியில் இருந்த எஸ்எஸ்ஐ வில்சனை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்துல் சமீம், தவ்பீக் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. இவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

 

இந்நிலையில், சிறையில் கீழ்தள அறையில் அடைக்க வேண்டும் என்றும், நடைப்பயிற்சி செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், மற்ற கைதிகளுடன் பேச அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி பிப்ரவரி 25ம் தேதி முதல் அவர்கள் திடீரென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இது குறித்து சேலம் மத்திய சிறைக் காவலர்கள் தரப்பில் கேட்டபோது, ''இரண்டு கைதிகளும் உயர் பாதுகாப்புப் பிரிவில் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய கோரிக்கைகள் குறித்து ஒரு மனுவாக எழுதிக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், திடீரென்று உண்ணாவிரதப் போராட்டம் என்ற பெயரில் சிறைத்துறை நிர்வாகத்தை மிரட்டிப் பார்க்க நினைக்கின்றனர். உணவு உண்ணவில்லையே தவிர பழங்களையும் நொறுக்குத் தீனிகளையும் சாப்பிட்டுவிட்டு உண்ணாவிரத நாடகமாடுகின்றனர்'' என்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்