Published on 27/03/2023 | Edited on 27/03/2023
கொளத்தூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாமகவினருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
சேலம் மாவட்டம் கொளத்தூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாமக நிர்வாகி ஜி.கே.மணி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அங்கிருந்த பாமகவினர் கண்டனத்தைத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரும் பாமகவினரும் மோதிக் கொண்டனர். அவர்களிடையே சிறு கைகலப்பு ஏற்பட்ட நிலையில், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.