Skip to main content

முக்கிய முடிவு எடுக்கும் த.வெ.க.

Published on 09/01/2025 | Edited on 09/01/2025

 

tvk meeting regard district secretary

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தொடர்ந்து கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கட்சியின் பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட முதன்மை நிர்வாகிகளை அவ்வப்போது சந்தித்து கட்சி பணிகள் குறித்து கேட்டு வருகிறார். முன்னதாக மாநாடு முடிந்த கையோடு செயற்குழு கூட்டம் நடந்த நிலையில் அதில் பொதுச்செயலாளர் அனந்துக்கு ஒவ்வொரு மாவட்டமாக சென்று கட்சியின் கள நிலவரம் குறித்து ஆய்வு செய்து மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுப்பது தொடர்பாக ஆய்வறிக்கை சமர்பிக்குமாறு விஜய் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.

இதையடுத்து கடந்த மூன்று மாதங்களாக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் தேர்ந்தெடுப்பது குறித்து பணிகள் நடந்து வந்தது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் கட்சியில் 100 முதல் 110 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டது. சமீபத்தில் விஜய்யும் அடுத்த மாதம் கட்சி அறிவித்து ஒரு வருடம் ஆகவுள்ள நிலையில் அதற்குள் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கும் பணியை முடிக்க வேண்டும் என ஆனந்துக்கு உத்தரவிட்டதாக கூறப்பட்டது. மேலும் மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் விஜய் திட்டமிட்டுதாக சொல்லப்பட்டது. 

இந்த நிலையில் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் நாளை ஜனவரி 10ஆம் தேதி மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் மற்றும் அணித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

சார்ந்த செய்திகள்