Skip to main content

தீப்பெட்டித் தொழிற்சாலையில் விபத்து; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு 

Published on 01/07/2023 | Edited on 01/07/2023

 

tuticorin fire incident cm relief fund announced

 

தூத்துக்குடி தீப்பெட்டித் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த விபத்து குறித்துத் தெரிவிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், சித்திரம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான தீப்பெட்டித் தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் தங்கவேல் என்பவர் மனைவி மாரியம்மாள் (வயது 70) என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மேலும் இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காட்டு ராஜா மனைவி கனகராஜேஸ்வரி (வயது 49) என்பவருக்குச் சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

 

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்