Skip to main content

தேனியில் உடைந்தது டிடிவி அணி!

Published on 09/06/2019 | Edited on 09/06/2019

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அமமுகவினர் தங்களை தாய் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

 

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் அமமுகவை சேர்ந்த கருநாக்கமுத்தன்பட்டி முன்னாள் சேர்மன் ஓ.ராஜமாணிக்கம், மாவட்ட பிரதிநிதியும்,முன்னாள் கம்பம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் பாலன், ஒன்றிய துணை செயலாளர் செல்விராஜமாணிக்கம், ஒன்றிய பிரதிநிதி ஈஸ்வரன், ஆங்கூர்பாளையத்தை சேர்ந்த கிளை செயலாளர் பரமன், மாவட்ட பிரதிநிதி சாந்தி பரமன், ஒன்றிய பிரதிநிதி பெருமாள், சாமாண்டிபுரம் கிளை செயலாளர் சுரேந்திரன், மஞ்சள்குளம் கிளை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் கடமலை-மயிலை ஒன்றியம் காமராஜபுரம் கிளை செயலாளர் லட்சாதிபதி, கிளை கழக நிர்வாகிகள் கடுக்கன் பாண்டி, செல்லத்துரை உள்ளிட்ட பலரும் அமமுக கட்சியிலிருந்து விலகி கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தங்களை தாய் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். 

 

 TTV team breaks in Theni!

 

தாய் கழகத்தில் இணைத்து கொண்டவர்கள் கூறும்போது, அமமுகவில் கட்சியினருக்கு உரிய மரியாதையும், மதிப்பும் இல்லை. எனவே தங்களை தாய் கழகத்தில் இணைத்துக் கொண்டோம் என்றனர். இந்தநிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார், மாவட்ட கழக துணை செயலாளர் முருக்கோடை ராமர், கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர் கொத்தாளமுத்து, கம்பம் நகர செயலாளர் ஆர்.ஆர்.ஜெகதீஷ், கம்பம் முன்னாள் நகர செயலாளர் பாலு, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும்  உடன் இருந்தனர். 

 

 

தேனி மாவட்டம் தான் டிடிவியின் கோட்டையாக இருந்தது. அந்த  கோட்டையவே ஒபிஎஸ்  உடைத்து டிடிவி ஆதரவாளர்களே மீண்டும்  கட்சியில்  சேர்த்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்