Skip to main content

"தொண்டர்கள் தான் முடிவு செய்ய முடியும்" - டிடிவி தினகரன்!

Published on 30/06/2022 | Edited on 30/06/2022

 

 

அதிமுகவில் ஒற்றைத்தலைமை கோரிக்கை வலுத்துவந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூடியது. அந்தக் கூட்டத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொதுக்குழுக் கூட்டத்தை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தொடுத்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழுக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றிக் கொள்ளலாம், புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து கூடிய பொதுக்குழுக் கூட்டத்தில், அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக இபிஎஸ் தரப்பு அறிவித்தது. இந்நிலையில், தற்போது அடுத்து பொதுக்குழுக் கூட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான ஆலோசனையில் இபிஎஸ் தரப்பு ஈடுபட்டு வருகிறது.

 

இந்த களேபரங்கள் அதிமுகவில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இதுதொடர்பான விவாதிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டிடிவி தினகரன், " அதிமுகவின் தற்போதைய நிலையைப் பார்த்தால் வருத்தமாக உள்ளது. அதிமுகவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. நாங்கள் நரி கூட்டத்தில் சேர விரும்ப மாட்டோம். நிர்வாகிகளை வைத்து தலைமைப் பதவிகளைத் தேர்ந்தெடுக்க முடியாது. தொண்டர்கள் தான் முடிவு செய்ய முடியும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்