Skip to main content

முத்தலாக் மசோதா! அமித்ஷா மிரட்டலுக்கு அடிபணிந்த அதிமுக! 

Published on 30/07/2019 | Edited on 30/07/2019

 

முத்தலாக் மசோதாவை மக்களவையில் அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் ஆதரித்துப் பேசினார். மாநிலங்களவையில் அதிமுகவின் தலைவர் நவநீதகிருஷ்ணன், முத்தலாக் மசோதாவை நாடாளுமன்ற ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும். தவறான விளைவுகளை முத்தலாக் மசோதா ஏற்படுத்திவிடக்கூடாது என்றார். இவரது பேச்சு பாஜகவை கோபப்படுத்தியது. 

 

ADMK MP


 

அவையில் இருந்த அமித்ஷா, உடனடியாக எடப்பாடி பழனிசாமியை தொடர்புகொண்டு, ஓ.பன்னீர்செல்வம் மகன் முத்தலாக் மசோதாவை ஆதரித்து பேசினார். இப்பொழுது நீங்கள் அதனை எதிர்க்கிறீர்கள். விவாதத்திற்கு பிறகு மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்படும். ஆகவே நீங்கள் அந்த ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளக்கூடாது என எச்சரித்தார். 


 

 

அமித்ஷாவின் எச்சரிக்கை டெல்லியில் இருந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. அமித்ஷாவின் கட்டளைப்படி ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் அதிமுக புறக்கணித்தது. திமுகவும், காங்கிரஸ் கட்சியும் முத்தலாக் மசோதாவை எதிர்த்து வாக்களித்தன. ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சி உறுப்பினர்கள் அவைக்கே வரவில்லை. இப்படியாக தனக்கோ உரிய பாணியில் முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் பாஜக வெற்றிபெற வைத்துள்ளது. 


 

 


 

சார்ந்த செய்திகள்