2 கோடி மதிப்பிலான ஐம்பொன்
சிலைகளை விற்க முயன்றவர் கைது!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு அருகே இருக்கும் சேடபட்டியை சேர்ந்த ரஞ்சித் கேரளாவிற்கு வேலைக்கு போய் வருகிறார். அங்கு அவரது நண்பர்கள் கொடுத்த ஐம்பொன் சிலைகளை வீட்டுக்கு கொண்டு வந்தவர் கடந்த ஆறு மாதமாக அந்த ஐம்பொன் சிலைகளை 2 கோடிக்குவிற்க பல பேரை வீட்டுக்கு கூட்டி வந்து பேரம் பேசி வந்ததுள்ளார்.
இந்த தகவல் போலீசாருக்கு தெரிய வந்ததின் பேரில், ரஞ்சித் வீட்டை சோதனை செய்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் ரஞ்சித்தோ போலீசார் தன்னை நோட்டமிடுகிறார்கள் என்பது தெரிந்து தன்னிடம் இருந்த சில சிலைகளை ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வனப்பகுதிகளில் வீசி விட்டு மீதி சிலையை பட்டிவீரன்பட்டி மாட்டு தரகரான சந்தன மூர்த்தியிடம் ஒப்படைத்துள்ளளார்.
ஆனால் ரஞ்சித் சிலைகளை கொடுத்து பல நாட்கள் ஆகியும் வாங்க வராததால் பயந்து போன சந்தன மூர்த்தி போலீஸ்க்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் ரஞ்சித்தை போலீஸ்சார் தேடியும் வந்தனர். இந்த நிலையில் தான் சிலைகளை பார்க்க மதுரையில் இருந்து ஆட்கள் வருவதாக சந்தனமூர்த்தியிடம் ரஞ்சித் தெரிவித்தார்.
இத்தகவலை சந்தனமூர்த்தி போலீசுக்கு தெரியபடுத்தியதின் பேரில் போலீசாரும் உஷாராக இருந்தனர் அப்போது வீட்டுக்கு வந்த ரஞ்சித்தை போலீஸ்சார் மடக்கி பிடித்து கைது செய்து பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பல கோடி ஐம்பொன் சிலைகளையும் கைப்பற்றியுள்ளனர்.
- சக்தி