மீண்டும் திறக்க முயன்ற “டாஸ்மாக்” கடை சூறை; 5 பேர் கைது
தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 1ந் தேதி கோவை மாவட்டத்தில் 190 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றம் அதில் சில திருத்தங்கள் செய்து உத்தரவிட்டது. அதன்படி மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் நகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து தமிழகத்தின் நகரப்பகுதிக்குள் மூடப்பட்ட கடைகளை திறக்க அரு அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அதன்படி கோவை புலியகுளம் தாமு நகர் பி.என்.பாளையம் சாலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட “டாஸ்மாக்” மதுக்கடை நேற்று காலை திறக்கப்பட இருந்தது.
இதற்காக அந்த கடையையொட்டி உள்ள மதுகுடிக்கும் பாரில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொன்றுவந்தது அதிகாரிகளால் இறக்கி வைக்கப்பட்டது.
மூடப்பட்ட மதுக்கடை மீண்டும் திறக்கப்படும் தகவல் தெரிந்ததும், அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்களும், ஆண்களும் டாஸ்மாக் கடைக்கு முன்பாக வந்து குவிந்தனர். பாருக்குள் விற்பனைக்காக கொண்டுவந்து வைக்கபட்டிருந்த மதுபாட்டில்களை எடுத்து சாலையில் போட்டு உடைத்து போராட்டம் நடத்தினார்கள். மேலும் அவர்கள், பாரில் இருந்த பிளாஸ்டிக் மேஜை, நாற்காலிகளையும் எடுத்து வெளியே வீசி எறிந்தனர்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் இராமநாதபுரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மது பாட்டில்களை உடைத்தவர்களை போலீசார் சமாதானம் செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி அவர்களில் , வேலுசாமி (வயது-34)), நித்யானந்தம் (வயது-34), அப்துல்ரகுமான்(வயது-39), அமிர்தராஜ்(வயது-34) பேரை கைது செய்தனர்.
சிவசுப்பிரமணியம்