திருச்சி: தமிழகமும் சாதிய படுகொலைகளும் மக்கள்
பொது விசாரணை!
இந்த விசாரணை நிகழ்வில் சாதிய படுகொலை செய்யப்பட்ட 30 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் தரப்பு வாக்குமூலங்களைக் கொடுக்கிறார்கள். படுகொலைகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் 15 முதல் 20 சதவீதமே தண்டனை கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
பொது விசாரணை திருச்சியில் உள்ள புனித வளனார் கல்லூரியில் நடைபெறுகிறது. பொது விசாரணை நடுவர்களாக கொளத்தூர் மணி, எழுத்தாளர் பவா செல்லத்துரை, பிரியா தம்பி, வழக்கறிஞர்கள் எழில் கரோலின், சவீதா, மருத்துவர் சதிஷ் முத்துராம், பத்திரிகையாளர்கள் இரா.வினோத், ஆய்வாளர் முனைவர் கல்பனீ கருணாகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் எவிடெண்ஸ் கதிர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
- ஜே.டி.ஆர்