Published on 22/12/2018 | Edited on 22/12/2018

திருச்சி சங்கம் ஹோட்டலில் இன்று சனிக்கிழமை மாலை தி.மு க. தலைவர் மு.க. ஸ்டாலினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சந்தித்து தற்போதய அரசியல் நிலவரம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை செய்தார்கள். அருகில் திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ., மாநகர மாவட்ட செயலாளர் மு. அன்பழகன், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் பொய்யமொழி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முனைவர் எம்.ஏ. எம்.நிஜாம், தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான், வடக்கு மாவட்ட தலைவர் அப்துல் வஹாப், வடக்கு மாவட்ட செயலாளர் நிஜாம்தீன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்.
