Skip to main content

சமயபுரம் மாரியம்மன் கோவில் காணிக்கை எண்ணும் பணி; உண்டியலில் குவிந்த தங்கம்

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

trichy samayapuram mariamman temple donation counting 

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது.

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில், தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இந்த தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். இவ்வாறு பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணினர்.

 

அப்போது கோயில் உண்டியலில் கடந்த 13 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 24 ஆயிரத்து 485 ரொக்கமும் 2 கிலோ 759 கிராம் தங்கமும் 5 கிலோ 117 கிராம் வெள்ளியும் 113 அயல்நாட்டு நோட்டுகளும் 264 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்கப் பெற்றன எனக் கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்