Published on 08/10/2019 | Edited on 08/10/2019
திருச்சியில் லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டத்தில் சீராத்தோப்பு பகுதியை சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகனின் உறவினரான ராஜேஸ்வரி என்ற பெண்ணை திருச்சி அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றன தனிப்படை காவல்துறையினர்.

ஏற்கனவே நேற்று (07/10/2019) திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இருவரை தனிப்படை போலீசார் அடுத்தடுத்து கைது செய்து விசாரணை செய்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. கொள்ளையன் முருகனை விரைவில் காவல்துறை கைது செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.