வேலூரில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தற்போது அரசியல் கட்சியினர் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலூரில் பரப்புரையில் ஈடுபட்டதிமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில்,
எடப்பாடி பழனிச்சாமி சொல்லியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் கனவு கண்டு கொண்டிருக்கிறார். ஆகவே எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதிமுக ஆட்சியை அழிக்க முடியாது. அவர் கனவு காண்கிறார் என்று சொல்கிறார். நான் கனவெல்லாம் காணவில்லை, கனவு காண வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. விரைவில் பாருங்கள் நனவாக நடக்கப் போகிறதா என்று பாருங்கள். பிஜேபி ஆட்சி ஒத்துழைப்போடு இந்த ஆட்சி இப்போது நடந்து கொண்டிருக்கிறது இதைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது. இதுதான் இப்போது இருக்கக்கூடிய உண்மை. இந்த ஆட்சியை காப்பாற்றுவதற்கு, இந்த ஆட்சியை நீடித்து நிலைத்து வைத்திருப்பதற்காக அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால், மக்களை பற்றி எல்லாம் கவலைப்படவில்லை அவங்களுடைய கவலைகள் எல்லாம் ஆட்சியை எப்படியாவது காப்பாத்தணும் அதற்காக அங்கே இருக்கக்கூடிய ஆளுங்கட்சி எம்எல்ஏக்களுக்கு மாசம் மாசம் படியளந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல மாதம் மாதம் ஆளும் கட்சியை எம்எல்ஏக்களுக்கு மட்டுமல்ல அமைச்சர்களுக்கும் படியளந்து கொண்டிருக்கிறார்கள்.
அப்படி படியளக்க வேண்டும் என்றால் எப்படி முடியும். அதற்கு ஊழல் செய்ய வேண்டும், லஞ்சம் வாங்க வேண்டும், கொள்ளையடிக்க வேண்டும். அரசியல் செய்யனும், கமிஷன் வாங்கணும் இதையெல்லாம் செய்து பொதுப்பணித்துறையில், நெடுஞ்சாலைத்துறையில், உள்ளாட்சித் துறையில் இப்படி எல்லாத் துறைகளையும் பர்சன்டேஜ் வச்சு, கமிஷன் வச்சு கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டு
அதேபோல்தான் சேலம் எட்டு வழிச்சாலை, 8 வழி சாலை என்பது தேவை தான். நான் மறுக்கவில்லை அபிவிருத்திகள் வந்தாகணும். வளர்ச்சிகள் நாட்டுக்கு வரணும். டி ஆர் பாலு என்னுடன் வந்திருக்கிறார். அவரும் அந்தத் துறையில் மத்தியிலே போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர். அவர் எத்தனையோ சாலைகளை இந்தியா முழுக்க அமைத்திருக்கிறார். தமிழ்நாட்டிலும் பல சாலைகளை அமைத்து இருக்கிறார், விரிவாக்கம் செய்து கொடுத்திருக்கிறார். அப்போதெல்லாம் எங்காவது எந்த பிரச்சனையும் வந்து இருக்கா? காரணம் என்னவென்றால் அங்கே இருக்கக்கூடிய மக்களிடத்தில் கலந்து பேசி அவர்களுடைய கருத்துக்களை கேட்டு விவசாயிகளுக்கு, மக்களுக்கு எந்த துன்பமும் தொல்லைகளும் வரக்கூடாது என்பதை எல்லாம் திட்டமிட்டு சாலைகளை மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது பணிகளை நாம் செய்தோம். ஆனா இன்னைக்கு பல எதிர்ப்புகள், தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை காரணம் கமிஷன் வாங்குவதையும், கொள்ளை அடிப்பதில் குறியாக இருக்கிறார்களே தவிர மக்களைப் பற்றி இந்த ஆட்சி கவலைப்படவில்லை.
இந்த லட்சணத்துல அவர் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருக்கிறார். என்ன பேசினார் என்று நானும் ஒரு குறிப்பு எடுத்துக் கொண்டு தான் வந்து இருக்கேன். ஏனென்றால் இல்லாத பொல்லாததையும் சொல்லி விட்டுப் போய் விடக்கூடாது என்பதற்காக. ஏனென்றால் நான் கலைஞருடைய மகன் எதையும் ஆதாரத்தோடு தான் பேசுவேன். வாய்க்கு வந்த படியெல்லாம் பேசிட்டு போகக்கூடாது.
அவர் சொல்லுகிறார் நான் ஒரு தொண்டன், தொண்டனாக இருக்கக் கூடியவன் இன்று முதலமைச்சராக இருக்கிறேன் என்று சொல்லுகிறார். நான் கேட்கிறேன் ஒரு தொண்டராக இருந்த இவர் எத்தனை முறை எம்எல்ஏவாக இருந்திருக்கிறார், எம்பியாக இருந்திருக்கிறார். அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது எல்லாம் பணத்தை எல்லாம் வசூல் பண்ணி கொள்ளையடித்து கொடுக்க ஒரு ஐந்து பேர் இருப்பார்கள். அந்த ஐந்து பேரில் இவரும் முக்கியமான ஒருத்தர். ஜெயலலிதா மறைந்த உடனே ஓ பன்னீர்செல்வம் முதலமைச்சராக உட்கார்ந்தார். ஓபிஎஸ் முதலமைச்சராக வந்து அமர்ந்த பொழுது அவரை மாற்றிவிட்டு சசிகலா என்ன செய்தார் என்றால் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் ஆக்கினார்கள். ஏனென்றால் அவர்தான் கமிஷனை கரெக்டாக கொடுப்பார் என்று அவரை முதலமைச்சர் ஆக்கினார்கள். செய்யாதுரை அதேபோல் சேகர்ரெட்டி இவர்கள் வீட்டில் எல்லாம் ரெய்டு நடந்திருக்கு. அவர்கள் வீட்டில் ரெய்டு நடந்ததெற்கெல்லாம் என்ன காரணம் என்று கேட்டீர்கள் என்றால் இவருடைய பணம் தான். இவர் கொள்ளையடித்து குவித்து வைத்து இருக்கின்ற அந்த ஊழல் பணம் தான். இதுதான் இன்று இருக்கக்கூடிய உண்மை.
நாம் 38 தொகுதியிலும் முட்டாய் கொடுத்து மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கியதாக எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் கூறினார். அதற்கு கூட நான் பதில் சொன்னேன். சரி நாங்கள் 38 தொகுதிகளில் முட்டாய் கொடுத்தோம் எனில் தேனியில் நீங்கள் எப்படி வென்றீர்கள் அல்வா கொடுத்து வென்றீர்களா என கேட்டேன் என்றார்.