Skip to main content

3 வது, 4வது பிரசவத்திற்கு வரும் பெண்களை குறிவைக்கும் குழந்தை விற்பனை கும்பல்..

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

திருச்சி அருகே மணப்பாறையில் அடுத்த நடுக்காட்டுபட்டியில் ஆழ்துணை கிணற்றில் 2 வயது குழந்தை விழுந்து அந்த குழந்தையை காப்பாற்ற போராடினார்கள். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திருச்சி அரசு மருத்துவனையில் குழந்தையை விற்பனை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

trichy incident


மணப்பாறையை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்ததால் குழந்தையை தத்தெடுக்கும் முயற்சியில் இறங்கி மணப்பாறை அரசு மருத்துவனையில் வேலை செய்யும் ஊழியர் அந்தோணியம்மாள் மேரி என்பவரிடம் சொல்ல அப்போது அவர் பிறந்து 1 மாதமே ஆன ஆண்குழந்தை ஒன்று இருக்கிறது. ஒரு குழந்தை 1 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் ஏன பேரம் பேசி முடிவெடுத்தனர்.

பேரம் பேசி முடிந்தவுடன் மணப்பாறை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள கடையில் 20 ரூபாய் பத்திரம் வாங்கி அதில் குழந்தை பெற்ற நபரும், குழந்தை விற்ற நபரும் கைரேகை மற்றும் கையெழுத்து பெற்றுக்கொண்டு குழந்தையை கைமாற்றிக்கொண்டனர்.

குழந்தை விற்கப்பட்ட தகவல் மாவட்ட குழந்தை கடத்தல் பிரிவு போலிசுக்கு ரகசிய தகவல் கிடைக்க அதன் பேரில் போலீஸ் மணப்பாறை அரசு மருத்துவனையில் உள்ள மேரி என்பவரை விசாரித்த போது குழந்தையை கைமாற்றி கொடுத்ததற்காக கமிஷன் தொகை 20,000 ரூபாய் பெற்றுக்கொண்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
 

trichy incident


இது போல் அரசு மருத்துவனைக்கு 3வது, 4வது குழந்தைகள் பிரசவத்திற்கு வரும் பெண்களை குறித்து வைத்து பணத்து ஆசை காட்டி குழந்தைகள் விற்பனை செய்வது தொடர்ச்சியாக நடந்திருப்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது.

சமீபத்தில் நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரத்தில் கடந்த மே மாதத்தில் ஓய்வு பெற்ற நர்ஸ் அமுதா என்பவர் குழந்தை விற்பனை குறித்த ஆடியோ வெளியானது. அதன் பிறகு 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி. போலிசார் விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. இதே போன்று மணப்பாறை குழந்தை விற்பனையும் விஸ்வரூபம் எடுக்கும் என்கிறார்கள்.
 

சார்ந்த செய்திகள்