Skip to main content

சொத்து தகராறு! சகோதரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை! 

Published on 15/06/2022 | Edited on 15/06/2022

 

tt

 

திருச்சி மாவட்டம், கல்லக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெங்கடாஜபுரம் பகுதி, தெற்கு தெருவைச் சேர்ந்தவர்கள் தனிஸ்லாஸ் மற்றும் ஆரோக்கியசாமி. இவர்கள் இருவரும் சகோதரர்கள். இவர்கள் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. கடந்த 2014 ஏப்ரல் மாதம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் ஆரோக்கியசாமி, அவரது மகன் சசிகுமார், அவரது மனைவி தனமேரி ஆகிய மூவரும் சேர்ந்து தனிஸ்லாஸ் மற்றும் அவரது மகனான நெப்போலியன் ஆகியோரை குத்துக் கோல் கொண்டு குத்தியதில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். 

 

இந்த வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. திருச்சி நீதிமன்றத்தில் நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தனவேல், அரசு தரப்பில் முன் வைக்கப்பட்ட வாதங்களை அடிப்படையாகக் கொண்டும், சாட்சிகளை விசாரணை செய்தும், இந்த வழக்கில் தனிஸ்லாஸ் மற்றும் அவரது மகன் நெப்போலியன் இருவரும் கொலை செய்யப்பட்டது உறுதி செய்தனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியான ஆரோக்கியசாமி மகன் சசிக்குமாருக்கு 2 ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இரண்டாவது குற்றவாளியான ஆரோக்கியசாமியின் மனைவி தனமேரிக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மூன்றாவது குற்றவாளியான ஆரோக்கியசாமிக்கு ஒரு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

சார்ந்த செய்திகள்