Skip to main content

கீழே விழுந்த 130 அடி வயர்லெஸ் டவர்; அசம்பாவிதம் தவிர்ப்பு

Published on 17/04/2023 | Edited on 17/04/2023

 

trichy corporation wireless tower incident  

 

திருச்சி மாநகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வயர்லெஸ் டவர் கம்பம் முறிந்து சாலை நடுவே உள்ள மின் கம்பிகள் மீது விழுந்தது. இந்த  வயர்லெஸ் டவர் கம்பமானது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பயன்படுத்தக்கூடிய வாக்கி டாக்கி உடைய 2ஜி அலைக் கற்றைக்கான கோபுரமாகும்.

 

இந்த சம்பவத்தின் போது அங்கு அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் உடனடியாக சாலை நடுவே தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் அப்பகுதி வழியாகச் செல்லாமல் இருக்குமாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அவ்வழியே வரும் பொது மக்களுக்கு மாற்றுப் பாதையில் செல்ல அறிவிக்கப்பட்டது. 130 அடி உயரம் உள்ள இந்த வயலர்ஸ் டவர் முறிந்து கீழே விழுந்த போது, மின்மாற்றியின் அருகில் இருந்த மின் கம்பிகளுக்கிடையே டவரின் உடைந்த பகுதிகள் சிக்கிக் கொண்டன. இதனால் அப்பகுதி முழுவதும் மின் இணைப்பு தடைப்பட்டது. உடைந்த டவரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

 

சம்பவத்தின்போது யாரும் அருகில் இல்லாததால் எவ்விதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்