Published on 25/05/2022 | Edited on 25/05/2022
திருச்சி மாநகராட்சி அவசரக் கூட்டம் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவித்தனர். இக்கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.