திருச்சியில் உள்ள பழைய காவிரி பாலத்தில் ஆட்டோக்களை அனுமதிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மனு அளித்தனர்.
மனுவில் தற்போது காவிரி பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு 3 கி.மீ. தூரம் வாகனங்கள் சுற்றி வந்து காவிரி ஆற்றைக் கடந்து செல்வதால், இதனால் கடந்த இரண்டு மாதமாக வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். ஏற்கனவே உள்ள பழைய காவிரி பாலத்தை இருசக்கர வாகனங்களுக்கு திறப்பதாக மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வரும் நிலையில் அந்தப் பாலத்தில் ஆட்டோவிற்கும் அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிகழ்வில், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி அமைப்பைச் சேர்ந்த மாவட்ட தலைவர் கோபி தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.