திருச்சி விமானநிலையத்தில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாட்டுகளுக்கும் சென்னை, பெங்களுரு போன்ற பெருநகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள்.
தமிழகத்தில் வேறு எந்த விமானநிலையத்திலும் இல்லாத வகையில் திருச்சியில் தான் அதிக அளவில் தங்கம் கடத்தல் அதிகரித்து வருகிறது. இது அத்தனையும் அதிகாரிகள் துணையில்லாமல் நடைபெறாது என்பதை உறுதி செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முடிவு செய்து திருச்சி, கோவை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் இருந்து 40 அதிகாரிகள் தீடிரென மலேசியாவில் இருந்து வந்த 3 விமானங்கள், ஷார்ஷாவில் இருந்து வந்த ஒரு விமானம் உள்ளிட்ட 4 விமானங்களில் இருந்து வந்து இறங்கிய 150 பயணிகளை விடிய விடிய விசாரணை வலையத்தில் வைத்திருந்தார்கள்.
இவர்கள் அனைவரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக 13 கோடி மதிப்புள்ள 33 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது இல்லாமல் 3 கோடி மதிப்புள்ள செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் சோதனை மற்றும் விசாரணை முடித்து அனுப்பி வைத்தனர். இதில் தங்கம் கடத்தி வந்த 25 பேரை மட்டும் தனியே அழைத்து தொடர் விசாரணை நடத்தின்ர். அதில் அவர்கள் 25 பேருமே குருவிகள் என்பதை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தனர்.
குருவிகள் கொண்டு வந்து கொடுக்கும் தங்கத்தை வாங்குவதற்கு வெளியே நின்று கொண்டிருந்த 15 வியாரிகளையும் பிடித்து விசாரணை செய்து அவர்கள் அனைவரையும் சொந்த ஜாமீனில் விடுவித்து அதிகாரிகள் அழைக்கும் போது கட்டாயம் ஆஜர் ஆக வேண்டும் என்று நிபர்ந்தனையுடன் அனுப்பியிருக்கிறார்கள்.
இந்த தங்க கடத்தலுக்கு இரண்டு முக்கிய அதிகாரிகளின் சிக்கியிருக்கிறார்கள். அவர்களின் வங்கி எண்களில் தங்கம் வியாபாரிகள் பணம் பரிமாற்றம் செய்தற்கான ஆவணங்கள் சிக்கியிருக்கிறதாம்.
இதே போல தங்கம் கொண்டு வந்த குருவிகளில் 4 பேர் திருச்சியில் ஆளும்கட்சியின் பகுதி செயலாளர் ஒருவரின் பெயரை சொல்லியிருக்கிறார்கள். அவருக்காகத் தான் சென்று வந்தோம் என்று சொன்னதும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து அவரை பற்றி விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
திருச்சி மாநகரில் முக்கியமான பகுதிசெயலாளரான அவர், கடந்த இரண்டு வருடமாக தங்கம் விற்பனை பர்மா பஜாரில் செய்து வருகிறாராம். நாளுக்கு நாள் தங்கத்தின் விலை கூடிக்கொண்டே இருப்பதால் போலிஸ் துணையோடு இந்த வியாபாரம் செய்து வருகிறாராம்.
இந்த பகுதி செயலாளர், கட்சியில் உள்ள இன்னொரு முக்கிய பெண்மணிக்கு வங்கி கடன் பிரச்சனையில் விமான நிலைய பகுதியில் ஒரு வீட்டை 55 இலட்சத்திற்கு பேரம் பேசி 5 இலட்சம் மட்டுமே கொடுத்து அந்த வீட்டை அந்த பெண்மணி கஷ்டடியில் வாங்கி கொடுத்து விட்டாராம். இந்த பகுதி செயலாளர் தனக்காக இதே விமானநிலைய பகுதியில் ஒரு காலி இடத்தை வாங்கி விடுதி கட்டும் யோசனையில் இருக்கிறார்.