திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கர். அதே பகுதியை சேர்ந்தவர் செந்தில். மற்றொருவரான ஆனந்த் இந்த மூன்று பேரும் நண்பர்கள். இவர்கள் கூலித் தொழிலாளர்கள் . ரெங்கருக்கு பிறந்த 15 மாதம் ஆன நிதீஸ்வரர் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. ரெங்கர் தனது குழந்தையை தூக்கிக்கொண்டு வீடு அருகே உள்ள தெரு முனையில் நின்று கொண்டிருந்த தன்னுடைய நண்பர்கள் ஆனந்த், செந்தில் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது செந்தில் விளையாட்டுத்தனமாக ஆனந்தின் பாக்கெட்டில் இருந்து ரூ. 70 ரூபாய் பணம் எடுத்தார். இது தொடர்பாக இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது . அப்போது குறுக்கிட்ட ரெங்கர், ஏன் ஆனந்த் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்த என்று செந்திலை கண்டித்தார் .
இரண்டு நண்பர்களும் சேர்ந்த தன்னை கண்டித்ததால் ஆத்திரமடைந்த செந்தில் அருகில் இருந்த கட்டையை எடுத்து ரெங்கரை அடிக்க முயன்றார். அப்போது குறி தவறி ரங்கனின் கையில் இருந்த குழந்தை தலையில் அடி விழுந்தது .
இதில் நிதீஸ்வரர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே குழந்தையை முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் குழந்தை இறந்தது. இதுபற்றி தொட்டியம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
நண்பர்கள் விளையாட்டுதனமாக விளையாடியது கோபத்தை ஏற்படுத்தி ஆத்திரத்தில் சண்டையாக மாறி கடைசியில் கொலைகாரனாக மாறியது. இந்த சம்பவம் மனிதனின் மனநிலை எவ்வளவு கொடூரதனமாக மாறிவருகிறது என்பதை காட்டுகிறது.