Published on 03/11/2020 | Edited on 03/11/2020

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வெள்ளிமலையில் பழங்குடி மக்களுக்கு கரோனா வைரஸ் தொற்று காலத்தில் ஊரடங்கு காலத்திற்கு மாதம் ரூ.10,000 வழங்கக் கோரியும் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளை 6வது அட்டவணையில் சேர்த்திடக் கோரியும் கல்வராயன்மலை பகுதி பூர்விக குடிகளான பழங்குடி மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் பட்டா வழங்கக் கோரி தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில துனை செயலாளர் இரா.சின்னசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிமலையில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பழங்குடி மக்கள் சங்கம் மாவட்டச் செயலாளர் இரா.சடையன், சி.பி.ஐ. மாநிலக் குழு உறுப்பினர், சி.பி.ஐ. மாவட்டச் செயலாளர், சி.பி.ஐ. மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர், வி.தொ.சா மாவட்டகுழு உறுப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.