Skip to main content

அரசு தடையை மீறி வெட்டப்பட்ட மரங்கள்! 

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

Trees cut down in violation of government ban!

 

பனை மரத்தின் அடி முதல் நுனி வரை அனைத்தும் பயன்படக் கூடியவை. அதன் பதனீர், நுங்கு போன்றவை இயற்கை வைத்திய குணம் கொண்டவைகள். மேலும், தமிழ்நாட்டில் பனை மரத்தின் எண்ணிக்கை குறைந்துவருவதால், அதனைப் பாதுகாக்க அரசு பனைமரத்தை வெட்ட தடை விதித்துள்ளது. ஒருவேளை பனை மரத்தை வேட்ட வேண்டும் என்றால், அரசிடம் அதற்கான உரிய அனுமதி பெற வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. அது மட்டுமின்றி பனை மரங்களைப் பாதுகாக்கவும், பனைத் தொழிலை மேம்படுத்தவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பனை வாரியமே அமைத்துள்ளார்.

 

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்கும் அருகிலுள்ள சடையன்குளம் கிணற்றுச் சாலையிலிருந்த பனை மரங்கள் கடந்த ஒருவாரமாக வெட்டிக் கடத்தப்பட்டிருக்கின்றன. நேற்று (26.10.2021) அதிகாலையில் மரக் கடத்தல்காரர்கள் அந்தப் பகுதியிலுள்ள 60க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டிக்கொண்டிருந்த தகவலறிந்த தமிழ்நாடு பனை பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலத் தலைவரான கென்னடி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்குச் சென்றபோது வெட்டிக்கொண்டிருந்த பனைமரக் கடத்தல்கார்கள் தப்பியோடியிருக்கிறார்கள்.

 

இதுகுறித்து பனை பாதுகாப்பு இயக்கத் தலைவர் கென்னடி, இந்தப் பகுதியிலுள்ள பனை மரங்கள் அதிக அளவில் வெட்டிக் கடத்தப்பட்டு நாகர்கோவில், கன்னியாகுமாரி போன்ற பகுதிகளின் செங்கல் சூளைகளுக்கு டன் ஒன்று ரூ. 500, ரூ. 600 என விலைக்கு விற்கப்படுகின்றன. மாவட்ட நிர்வாகம் இதனைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, மரத்தை வெட்டிக் கடத்துபவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து பனைத் தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்