காணொலி காட்சி மூலம் பயிற்சி –செங்கோட்டையன்
இந்திய ஆட்சிப்பணித் தேர்விற்கு தமிழக மாணவர்களை தயார்படுத்த 2 கோடியே 17 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பயிற்சி ஆசிரியர்கள் தேர்வு நடைபெற்றுவருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த வாரம் முதல் தமிழக மாணவர்களுக்கு காணொலி காட்சி மூலம் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.