Skip to main content

சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

Published on 02/02/2025 | Edited on 02/02/2025

 

Traffic change in Chennai tomorrow

திமுகவின் முன்னாள் தலைவர் அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் நாளை சென்னையில் பேரணி நடத்தப்படுகிறது. இதன் காரணமாக சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெல்ஸ் சாலை- திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலிருந்து வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலைக்கு செல்ல அனுமதி இல்லை. போர் நினைவுச் சின்னம் பகுதியில் இருந்து நேப்பியர் பாலம் நோக்கி வரும் வாகனங்கள் கொடிமர சாலை வழியாக திருப்பிவிடப்படும். கலங்கரை விளக்கம் பகுதியில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக திருப்பி விடப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்