திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள வெலதிகமானிபெண்டா பகுதியில் வசிப்பவர்கள் சரத்பாபு (27), தினேஷ் (24), முனிராஜ் (26), வினோத்(24), விஜயன்(40), மோகன்ராஜ்(35). இந்த ஆறு இளைஞர்களும் கடந்த சில வருடங்களாக சாராயம் காய்ச்சுபவர்களிடமிருந்து லிட்டர் கணக்கில் வாங்கி கேன்களில் எடுத்து வந்து வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாராய வியாபாரிகளிடம் மொத்தமாக விற்று வியாபாரம் செய்து வந்திருக்கின்றனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் காவல் கண்காணிப்பாளர் வியாபாரிகளை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையில் இனிமேல் சாராயம் விற்க மாட்டோம் என்று ஆறு இளைஞர்கள் மனம் திரும்பி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இந்தத் தொழிலை விட்டுவிட்டு நாங்கள் வேறு தொழில் செய்வதற்கு அரசு எங்களுக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். ஆறு இளைஞர்கள் சாராய தொழிலை விட்டு விட்டு மணம் திருந்திய சம்பவம் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.