தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 35-வது வணிகர் தினம், இந்திய வணிகர் உரிமை மீட்பு மாநாடாக சென்னை வேலப்பன்சாவடியில் இன்று நடந்தது. காலை 9 மணியளவில் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் மாநாடு தொடங்கியது. தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வணிகர்களின் வாரிசுகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி விழா பேருரையாற்றுகிறார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பால கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பங்கேற்றனர். மாலை 3 மணிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
படங்கள்: ஸ்டாலின்