தஞ்சையில் 2 வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்(படங்கள்)
நீட் தேர்வை ரத்து செய் கிராமப்புற மாணவர்களையும் மருத்துவம் படிக்க செய்ய நீட்டை ரத்து செய் என்ற முழக்கத்துடன் மாணவர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கும் நிலையில் போராட்டத்திற்கு மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க மாணவர்களை தடுக்கும் நடவடிக்கைகளிலும் போலீசார் இறங்கியுள்ளனர். தஞ்சையில் நேற்று காலை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மாணவர்கள் தொடங்கிய போது குறைவாக இருந்த மாணவர்களுக்கு ஆதரவு பெருகிவருகிறது.
இன்று தஞ்சை நகரில் உள்ள கல்லூரிகளுக்கு சென்ற மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு உண்ணாவிரதம் நடக்கும் இடத்திற்கு சென்றனர். ஆனால் அந்த மாணவர்களை உண்ணாவிரப் பந்தலுக்கு அனுமதிக்காத போலீசார் தடுப்புகளை வைத்து மறித்ததால பரபரப்பு ஏற்பட்டது. அதையும் மீறி பல மாணவர்கள் வந்து கலந்து கொண்டனர். மாணவர்கள் போராட்டத்திற்கு வருவதை தடுப்பதால் போராட்டம் ஓயாது மேலும் விரிவடையும் என்கின்றனர் போராட்டத்தில் இருக்கும் மாணவர்கள்.
-இரா.பகத்சிங்