
தமிழகத்தில் இன்று மேலும் 5,941 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 5,697 பேர் தமிழ்நாட்டையும், மற்றவர்கள் பிற மாநில மற்றும் நாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,85,352 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 53,282 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,278 ஆகப் பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் 3 -ஆம் தேதி சென்னையில் 1,012 என்ற எண்ணிக்கையில் கரோனா பாதிப்பு பதிவாகியிருந்தது. சென்னையில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,26,677ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஒரே நாளில் 70,023 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 6,129 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,25,456 ஆக அதிகரித்துள்ளது. எனவே, கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 97 பேர் இறந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் 21 நாட்களாக 100-ஐ கடந்திருந்த கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை இன்று 3 ஆவது நாளாக 100க்கும் கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6,614 ஆக அதிகரித்துள்ளது.
இ-பாஸ்-க்கு தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் சென்னைக்கு வந்த 79 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.