Skip to main content

‘11 மாவட்டங்களுக்கு  கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்’ - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

Published on 01/08/2024 | Edited on 01/08/2024
 TN govt order for monitoring officers for 11 districts

மாவட்ட வளர்ச்சி பணிகளைத் துரிதப்படுத்தவும், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ளவும் 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கண்காணிப்பு அலுவலர்கள் பேரிடர் நேரத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். மேலும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ளவும் அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், “பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையின் முதன்மைச் செயலாளர் சி.விஜயராஜ் குமார் ஐஏஎஸ், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறையின் முதன்மைச் செயலாளர் பிரஜேந்திர நவ்னிட் ஐஏஎஸ், திண்டுக்கல் சென்னை மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 TN govt order for monitoring officers for 11 districts

சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையின் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஐஏஎஸ், சென்னை மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித் துறையின் செயலாளர் எஸ். மதுமதி ஐ.ஏ.எஸ், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் செயலாளர் வீரராகவ ராவ் ஐஏஎஸ், தூத்துக்குடி மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறையின் முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் ஐஏஎஸ், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குக் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணைத் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான எம். வள்ளலார் ஐஏஎஸ், திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். மனிதவள மேலாண்மைத் துறை செயலாளர் கே.நந்தகுமார் ஐ.ஏ.எஸ், கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் இ.சுந்தரவல்லி ஐஏஎஸ் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறுபான்மையினர் நல இயக்குநர் எம்.ஆசியா மரியம் ஐஏஎஸ், நாமக்கல் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு உப்பு கார்ப்பரேஷன் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் சி.என். மகேஸ்வரன் ஐ.ஏ.எஸ்,  நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்