Published on 20/03/2020 | Edited on 20/03/2020
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த வாரம் தொடங்கிய நிலையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறையைச் சார்ந்த மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று (20/03/2020) மதியம் 01.00 மணிக்கு நடைபெறவுள்ளது. சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், கரோனா அச்சம் காரணமாகப் பேரவை கூட்டத்தொடரை முன் கூட்டியே முடிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேரவையை ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கூட்டம் நடைபெறுகிறது.