திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வி.எஸ்.கே. காலனி பகுதியில் இன்று (21.08.2024) கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் அருகில் உள்ள கோனாமேடு மற்றும் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த திருவிழாவைக் காண வந்துள்ளனர். அப்போது இந்த இரு தரப்பினர்களிடையே நடனம் ஆடுவதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் பின்னர் பயங்கர மோதலாக மாறியது.
இத்தகைய சூழலில் தான் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட செய்யப்பட்டார். இவர் காமராஜபுரம் பகுதி சேர்ந்த சந்துரு என்று முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து சந்துருவின் உறவினர்கள், உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் முத்தார் நகர் மற்றும் கோனார் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தி உள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதனையடுத்து சம்பவ இடத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒரு குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.