Skip to main content

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் 

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

 threat at Chennai airport

 

சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். 

 

சென்னை விமான நிலையத்தில் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 200 விமானங்கள் உள்நாட்டுக்குள்ளும் ஏறத்தாழ 30 விமானங்கள் வெளிநாடுகளுக்கும் பயணம் செய்கின்றன. இந்நிலையில் இன்று காலை துபாய் செல்லும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. 

 

சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 7.20க்கு துபாய் செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சென்னையில் இருந்து துபாய் செல்லும் இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக  தொலைபேசி மூலம் வந்த மிரட்டலை அடுத்து விமானத்தை விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் வந்த விமானத்தில் 167 பயணிகள் பயணம் செய்ய இருந்ததாக கூறப்படுகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்