மதுரை சேர்ந்த எஸ்.சுமேஷ் என்பவர் பச்சியம்மன் மில்க் கடையில் 200 மிலி அளவு கொண்ட குளிரூட்டப்பட்ட மில்க் பாட்டிலை வாங்கியுள்ளார். அதன் எம்ஆர்பி விலை 22 ஆகும். ஆனால் கடைக்காரர் ரூபாய் 25-யை வாடிக்கையாளரிடம் பெற்றுள்ளார். இதனால் கடைக்காரரிடம் விலை குறித்து தெரிவித்த வாடிக்கையாளர் ரூபாய் 3-யை திருப்பிக் கொடுக்க மறுத்து விட்டார். அதனால் அந்த வாடிக்கையாளர் சுமேஷ் மதுரை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் நான் வாங்கிய பொருளின் நிர்ணயிக்கப்பட்ட விலை ரூபாய் 22 எனவும் , ஆனால் கடைக்காரர் ரூபாய் 3-யை கூடுதலாகப் பெற்று திருப்பி கொடுக்க மறுத்து விட்டார் என தனது வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் தனது மன உளைச்சலுக்கும் , அலைச்சலுக்கும் நஷ்ட ஈடு சம்மந்தப்பட்ட கடை உரிமையாளரிடம் பெற்று தர வேண்டும் என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையேற்ற மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி கடை உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜராகும் படி உத்தரவிட்டார். அப்போது ஆஜரான உரிமையாளர் குளிரூட்டுவதற்கு ரூபாய் 3 கூடுதலாக பெற்றதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி மில்க் பாட்டிலின் அதிகபட்ச விலையே ரூபாய் 22 தான் எனவும் கூடுதலாக வசூலிக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை எனக்கூறி சம்மந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு ரூபாய் 15,000 தர வேண்டும் எனவும் , ஸ்டேட் கன்சுமர் வெல்பேர் நிதியில் (STATE CONSUMER WELFARE FUND) ரூபாய் 50000 வைப்பு தொகை செலுத்த வேண்டும் எனவும், நீதிமன்ற கட்டணமாக ரூபாய் 3000 செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.மேலும் இந்த கட்டணம் முழுவதையும் ஆறு வார காலத்திற்குள் செலுத்த வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.