Skip to main content

காப்பி அடிப்பதை கட்டிக் கொடுப்பதாக சொன்ன மாணவர்கள் மீது தாக்குதல்; மாணவன் கைது

Published on 03/09/2023 | Edited on 03/09/2023

 

nn

 

தேர்வில் காப்பி அடிக்க முயன்ற மாணவனை  சக மாணவர்கள் இருவர் காப்பி அடிக்க கூடாது; அப்படி காப்பி அடித்தால் ஆசிரியர்களிடம் போட்டுக் கொடுத்து விடுவோம் எனக் கூறியதால் தாக்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.

 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அடுத்துள்ளது கீழ்முடிமண் பகுதி. இங்கு புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நாயினார்புரத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் துண்டு சீட்டை பார்த்து விடைகளை காப்பி அடித்துக் கொண்டிருந்தார். இதனை பார்த்த சக மாணவர்களான அமிர்தராஜ், நிஷாந்த் ஆகிய இருவரும் அந்த மாணவரிடம் பார்த்து எழுதாதே ஆசிரியர்களிடம் காட்டிக் கொடுத்து விடுவோம் எனக் கூறியுள்ளனர்.

 

தேர்வு முடிந்த பின் வெளியே வந்த அந்த இரண்டு மாணவர்களையும் காப்பி அடித்த மாணவர் கூர்மையான கம்பியால் தாக்கி குத்தியுள்ளார். இதனால் மாணவர்கள் காயமடைந்தனர். இரண்டு மாணவர்களும் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருவருக்கும் தையல் போடப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட மாணவனிடம் விசாரணை நடத்தி கைது செய்த போலீசார், சம்பந்தப்பட்ட மாணவன் எப்படி கூர்மையான ஆயுதத்துடன் பள்ளிக்கு வந்தான் என்பது குறித்து மாணவனிடமும் பள்ளி நிர்வாகத்திடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்