வட்டாட்சியரும், துனை கண்காணிப்பாளரும் இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவு 14க்கு முரனாக நடந்து கொண்டனர் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது..
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டத்திற்கு உட்பட்டது மாங்கொட்டாபுரம் கிராமம். இந்த கிராமத்தில் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் சொந்தமான முத்துமாலை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலானது இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வருகிறது ஒரு கால பூஜைக்காக அறநிலைய துறையால் ஒரு பூசாரியும் நியமிக்கபட்டு உள்ளார். இந்த கோயிலில் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த கொடை விழாவின் போது நன்கொடையாளர் பெயர் கல்வெட்டில் பொறிப்பது சம்பந்தமாக இரு பிரிவினருக்கு இடையே அடிதடி மோதல் ஏற்பட்டு ஏரல் காவல் நிலையத்தால் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கோயிலில் இரண்டு வருடங்களாக கொடை விழா நடத்தபடவில்லை தற்போது ஊர் நன்மை கருதி கொடை விழா நடத்த தீர்மானிக்கப்பட்ட போது ஒரு தரப்பினரை கூப்பிடாமல் கோவில் கொடை விழா நடத்த ஏற்பாடு நடத்தப்பட்டது. சுமார் 35 குடும்பங்களை ஒதுக்கி வைத்து கோவில் கொடை விழா நடத்தபட உள்ளதை சுட்டி காட்டி பாதிக்கபட்ட தரப்பினரால் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்ட போதிலும் இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 14-ன்படி நடந்து கொள்ளாமல் ஏரல் வட்டாட்சியர் மலர்த்தேவன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் சரக உட்கோட்ட காவல் துனை கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் ஆகியோர் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக நடந்து கொண்டும் மற்றொரு பிரிவினருக்கு பாதகமாக நடந்தும் கோவில் கொடை விழா 04.9.18 அன்று நடத்த உறுதுனையாக இருந்து அன்றைய நாளில் கோவில் கொடை விழா நடத்த போலிசாரால் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி.சகாய ஜோஸ் பாதிக்கப்பட்ட தரப்பினரை மிரட்டி ஊரை விட்டு வெளியேற்றியது தொடர்பாகவும் இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 1959 பிரிவு 45,46,47 ன் படி இந்து கோயிலில் முடிவு எடுக்க வேண்டியது இணை ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதை தெரிந்து கொண்டு கோயிலின் சாவியை தனிநபருக்கு வாங்கி கொடுத்து அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியதால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் ஏரல் வட்டாட்சியர் மலர்தேவன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி சகாய ஜோஸ் ஆகியோர் மீது இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவு 14 க்கு முரணாக நடந்து கொண்டார்கள் என மாநில மனித உரிமைகள் ஆணையம் மற்றும் காவல்துறை தலைவர், உள்துறை செயலாளர், தலைமைச் செயலாளர் வருவாய் துறை முதன்மை செயலாளர் ஆகியோருக்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் விரிவான புகார் மனு அளிக்கப்பட்டதால் பரப்பரப்பு நிலவி வருகின்றது.