Skip to main content

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் அனுமதி ரத்து!

Published on 11/09/2020 | Edited on 11/09/2020

 

thoothukudi district thiruchendur temple peoples

 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நாளை (12/09/2020), நாளை மறுநாள் (13/09/2020) பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆவணி உற்சவத்தின் முக்கிய நிகழ்வான சிவப்பு சாத்தி, பச்சை சாத்தி உற்சவம் நடைபெறுவதால் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

நாளை (12/09/2020) மாலை 04.30 மணிக்கு சிவப்புசாத்தி, செப்டம்பர் 13- ஆம் தேதி பகல் 11.00 மணிக்கு பச்சை சாத்தி நிகழ்வும் நடைபெறுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்