Published on 05/01/2019 | Edited on 05/01/2019
திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் திங்கள் கிழமை விசாரணைக்கு வருகிறது. கஜா புயல் நிவாரண பணிகள் நடந்து முடியாத நிலையில் இடைத்தேர்தல் நடத்த வேண்டாம். தேர்தலினால் புயல் நிவாரணம் பாதிக்கப்படும் என்றும் அதனால் தேர்தலை தள்ளி வைக்கவேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா மற்றும் மாரிமுத்து ஆகியோர் தொடர்ந்த மனுக்கள் வரும் 7-ம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.