வேலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 14ந் தேதி வரை அசைவம் விற்பதற்கு தடை விதித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம். இதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்மென மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் அதனை மீறி பல இடங்களில் மறைமுகமாக வியாபாரிகள் இறைச்சியை விற்பனை செய்கின்றனர்.
வேலூர் மாநகரத்துக்கு உட்பட்ட கொணவட்டம் பகுதியில் ஒரு வியாபாரி வீட்டில் வைத்து கோழி இறைச்சியை விற்பனை செய்கிறார் என மாநகர சுகாதார துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து அதிகாரிகள் அங்கு சென்று சோதனை செய்தபோது, இறைச்சி விற்பனை செய்யப்பட்டது உறுதியானது.
அதனை தொடர்ந்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில் 200 கிலோ கோழி இறைச்சி விற்பனைக்காக குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இறைச்சி விற்பனையாளர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.